நீட், ஜே.இ.இ. தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய 7 மாநில அரசுகள் முடிவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, August 26, 2020

நீட், ஜே.இ.இ. தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய 7 மாநில அரசுகள் முடிவு

 நீட், ஜே.இ.இ. தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய 7 மாநில அரசுகள் முடிவு


நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்துவதற்கு எதிராக வழக்கு தொடர 7 மாநில அரசுகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உச்சநீதிமன்றத்தில் வழக்குதொடர பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர், புதுச்சேரி, மேற்குவங்க அரசுகள் முடிவு செய்துள்ளது. சோனியா காந்தி உடனான ஆலோசனைப் பின் ஜார்க்கண்ட், மகாராஷ்ரா, மணிலா அரசுகளும் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தை நாட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். 

அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் 7 மாநில முதல்வர்கள் பங்கேற்ற கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.

இந்த நேரத்தில் தேர்வுகளை நடத்துவதால் மாணவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். மேற்கு வங்கம், புதுச்சேரி, மராட்டியம், பஞ்சாப், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில முதல்வர்கள் பங்கேற்றுள்ளனர்.


பலதரப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பாதுகாப்புகளுடன் இருக்கும் போதே தலைவர்களையே கொரோனா பீடித்துள்ள நிலையில் நீட், ஜே.இ.இ. தேர்வுகளை நடத்த முடிவெடுத்து 

அதனால் 28 லட்சம் மாணவர்கள் கொரோனாவினால் பாதிப்படைய மாட்டார்கள் என்றால் அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்று டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.


நாட்டில் வருகின்ற செப்டம்பர் 13ம் தேதி நடைபெறவுள்ள நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது. நீட், ஜே.இ.இ. தேர்வுகளை தள்ளிவைக்க கோரிக்கை வலுத்தபோதிலும் திட்டமிட்டப்படி தேர்வு நடத்த ஏற்பாடு செய்து ஹால் டிக்கெட்டுகளை வெளியிட்டு மொத்தம் 3,843 மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை www.nta.neet.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நீட் தேர்வு எழுத நாடு முழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment