நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, August 26, 2020

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம்

 நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம்

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதியும், ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


ஆனால், கொரோன பெருந்தொற்று சமயத்தில் தேர்வுகளை நடத்துவது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் நீட் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.


இந்த நிலையில் கொரோனா சூழலை கருத்தில்கொண்டு இந்த ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- 


''இளநிலை மருத்துவ படிப்புகளுக்கும், பல் மருத்துவத்திற்கும் இந்த ஆண்டு நீட் தேர்வு நடத்தப்பட உள்ளது. கொரோனா பெருந்தொற்று பரவலை கருத்தில் கொண்டு அதனை கைவிட வேண்டும். தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கடந்த சில மாதங்களாக கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் போராடி வருகின்றன. 

இந்த நிலையில் நீட் தேர்வை நடத்துவது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும். பாதுகாப்பு உபகரணங்களுடன் தேர்வை நடத்தினாலும், பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. பெருந்தொற்று பரவி வரும் காலத்தில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதும் சவாலான பணியாக உள்ளது.


இதனை கருத்தில் கொண்டு இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்திற்கு நடப்பாண்டு நீட் தேர்வை ரத்து செய்து 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்'' 

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment