உற்சாகத்தை எதிர்நோக்கும் சிறுவர்கள்! - Minnal Kalvi Seithi

Breaking

Monday, August 10, 2020

உற்சாகத்தை எதிர்நோக்கும் சிறுவர்கள்!

 உற்சாகத்தை எதிர்நோக்கும் சிறுவர்கள்!

திருப்பூர்:'வீட்டிலேயே முடங்கி சலிச்சுப்போச்சு' என்று மாணவ, மாணவிகள் கூறுகின்றனர். அதனால், பள்ளி திறக்கும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

கடந்த மார்ச் 25ல் ஊரடங்கு அமலானது முதல், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால், வீடுகளிலேயே மாணவ, மாணவியர் முடங்கியுள்ளனர். 'துாங்கிய நேரம் தவிர, மற்ற நேரங்களில், பொழுதை கழிப்பதற்கான, அவ்வளவு வழிகளையும் கடைபிடிச்சாச்சு... இனி என்னதான் செய்ய...' என்ற சலிப்புணர்வு, இவர்களிடம் ஏற்பட்டுள்ளது

.எனவே, வீட்டிலிருக்கும் மாணவ, மாணவியர் நலன் பேண, மனநல ஆலோசகர்கள் கூறியதாவது:கடந்த நான்கு மாதங்களாக, 'டிவி' நிகழ்ச்சிகள், மொபைல் போன் வாயிலாக வீடியோ கேம்ஸ், சமூக ஊடகங்கள் என்று பலவகைகளில், குழந்தைகள் நேரத்தை செலவிட்டுள்ளனர்.

செய்தித்தாள் மற்றும் புத்தகம் வாசிப்பு, பாடல் பாடுதல், ஆன்மிக மற்றும் சிறந்த கவிதைகளை மனனம் செய்தல், தொழில் கற்றுக்கொள்ளுதல் போன்று ஆக்கபூர்வமாகவும், பாரம்பரிய விளையாட்டுகள், செஸ், கேரம் போன்ற உற்சாகம் அளிக்கும் விஷயங்களிலும் ஈடுபட்டவர்கள் குறைவுதான்.

தற்போது 'ஆன்லைன்' மற்றும் தொலைக்காட்சி வழி வகுப்புகள் துவங்கியுள்ள நிலையில், அதை ஆர்வத்துடன் எதிர்கொள்வதற்கு இவர்கள் தயாராகியுள்ளனர். 

வீட்டை விட்டு மாறுபட்ட சூழலுக்குச் செல்ல, இவர்களிடம் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. பல மாணவ, மாணவிகள், தங்கள் நண்பர்களைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உள்ளனர். பாடங்கள் என்றாலே வெறுக்கும் மாணவர்களில் பலர் கூட, பள்ளிகள் திறக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்

.வீட்டுக்கு வெளியே, சமூக இடைவெளியைப் பின்பற்றி, மாணவ, மாணவிகளை விளையாட தினமும் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் வரை அனுமதிப்பதுகூட, அவர்களுக்கு மன இறுக்கத்தைப் போக்கும். பெற்றோர் இதைக் கண்காணிக்க வேண்டும். அவர்களே கூட பெரும் தலையீடு எதுவும் இன்றி, விளையாட்டை வழிநடத்தலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment