இளைஞர்களுக்கு உதவித்தொகை மாவட்ட கலெக்டர் அழைப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Monday, August 10, 2020

இளைஞர்களுக்கு உதவித்தொகை மாவட்ட கலெக்டர் அழைப்பு

 இளைஞர்களுக்கு உதவித்தொகை மாவட்ட கலெக்டர் அழைப்பு
கோவை:வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் ராஜாமணி வெளியிட்டுள்ள அறிக்கை: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, எந்த வேலையும் கிடைக்காதவர்களுக்கு, உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு, 200 ரூபாய், தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாய், பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு 400 ரூபாய், பட்டதாரி, முதுநிலை பட்டதாரி தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 600 ரூபாய் என மாதந்தோறும், உதவித்தொகை வழங்கப்படுகிறது.
 வேலைவாய்ப்புக்கு பதிவு செய்து, ஐந்தாண்டுகளுக்கு மேல் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவராக இருத்தல் அவசியம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 2020, செப்., 30ம் தேதியன்று, 45 வயதுக்கு மிகாமலும், மற்றவர்கள், 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு இல்லை; பிறரின் ஆண்டு குடும்ப வருமானம், 72 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்கவேண்டும். விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யவும், பிற விபரங்களுக்கும், https://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment