IAS தேர்வில் விவசாயி மகள் வெற்றி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, August 10, 2020

IAS தேர்வில் விவசாயி மகள் வெற்றி

 IAS தேர்வில் விவசாயி மகள் வெற்றி
கோத்தகிரி அருகே, விவசாயி மகள், ஐ.ஏ.எஸ்., தேர்வில், தேர்ச்சி பெற்று சாதித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கக்குளா கிராமத்தை சேர்ந்த விவசாயி சுந்தரன் மற்றும் இவரது மனைவி ஓய்வு பெற்ற செவிலியர் சித்ரா தேவி. இவர்களது, ஒரே மகள் மல்லிகா,25. இவர், ஐ.ஏ.எஸ்., தேர்வில், இந்திய அளவில், 621வது இடத்தில் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளார்.ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதித்த மாணவிக்கு, படுக சமுதாய மக்கள் மற்றும் கல்வியாளர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.



மல்லிகா கூறுகையில், ''ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக வர வேண்டும் என்பது எனக்கு சிறுவயது முதலே ஆசை. கோவை வேளாண் பல்கலையில் பட்டம் படிப்பு முடித்த நான், சென்னையில் தனியார் ஐ.ஏ.எஸ்., அகாடமியில் பயிற்சி பெற்றேன். மூன்று முறை தோல்வியை சந்தித்து, நான்காவது முறை தேர்ச்சி பெற்றுள்ளேன். பெற்றோர், நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் எனக்கு அளித்த ஊக்கத்தாலும், எனது முயற்சியாலும் சாதித்துள்ளேன். மக்களுக்கு சேவை செய்வேன்,'' என்றார்.

No comments:

Post a Comment