ஹிந்தி படிக்கிறது என் ஆசை உங்களுக்கு என்ன பிரச்னை...? தமிழக சிறுமியின் கேள்வி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, September 13, 2020

ஹிந்தி படிக்கிறது என் ஆசை உங்களுக்கு என்ன பிரச்னை...? தமிழக சிறுமியின் கேள்வி

ஹிந்தி படிக்கிறது என் ஆசை உங்களுக்கு என்ன பிரச்னை...? தமிழக சிறுமியின் கேள்வி

ஹிந்தி படிக்கிறது என்னோட ஆசை. உங்களுக்கு என்னங்க பிரச்சனை,'' என, மதுரை சிறுமி கேள்வி எழுப்பும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவுகிறது.

மதுரை, எச்.எம்.எஸ்., காலனியைச் சேர்ந்த வினோத் - கவுரி தம்பதி மகளான ஜெயப்ரவி, 11; தனியார் பள்ளியில், 6ம் வகுப்பு படிக்கிறார். அவர் வெளியிட்ட வீடியோ:

ஹிந்தியை எதிர்ப்பவர்களுக்கு ஒரு சில விஷயங்கள் சொல்ல வேண்டும். என்னோட ஆசை, விருப்பம், ஹிந்தி படிக்கிறது. மத்திய அரசு, அதை இலவசமாகவும் கற்று கொடுக்க தயாராக
இருக்கிறது.

உங்களுக்கு என்னங்க பிரச்னை. உங்கள் மூளையை வைத்து படிக்க போறேனா... உங்கள் பணத்தை வைத்து படிக்கப் போறேனா... இல்லையே... அப்புறம் ஏன்?

சினிமாத் துறையில் இருக்கிறவர்கள், 'ஹிந்தி வேண்டாம் போடா' என, 'டிரெண்டிங் டி - ஷர்ட்' போட்டிருங்கீங்க. சினிமாவில் மட்டும் நடிங்க. உண்மையான வாழ்க்கையில் நடிக்காதீங்க.


உங்க பசங்க மட்டும் எல்லா மொழியும் கற்றால் ஓ.கே., என்னை போன்றவர்கள் தமிழ் மட்டும் தான் படிக்க வேண்டுமா. என் கல்வி. என் உரிமை. அதை எதிர்க்க உங்களுக்கு ஒரு உரிமையும் இல்லை.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

1 comment:

  1. உன்னை யாரும் இந்தி படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. இந்தி பிரசார சபா 50 வருடமாக எல்லா ஊரிலும் இருக்கிறது. யாருக்கு விருப்பம் இருக்கிறதோ அவர்கள் படிக்கலாம். இந்தி திணிப்பு என்றால் என்ன என்று தெரியாமல் பேசக்கூடாது. தமிழ் ஒழுங்காக படிக்க வக்கில்லை, தாய் மொழி வெறும் புத்தகம் மட்டுமல்ல அதைதாண்டி நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete