வேளாண் பல்கலை இணைப்பு கல்லூரிகளுக்கான, கல்வி கட்டண நிர்ணய குழு, அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, September 12, 2020

வேளாண் பல்கலை இணைப்பு கல்லூரிகளுக்கான, கல்வி கட்டண நிர்ணய குழு, அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

வேளாண் பல்கலை இணைப்பு கல்லூரிகளுக்கான, கல்வி கட்டண நிர்ணய குழு, அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

தமிழ்நாடு வேளாண் பல்கலை இணைப்பு கல்லுாரிகளுக்கான, கல்வி கட்டண நிர்ணய குழு, நேற்று அரசிடம் அறிக்கை சமர்பித்தது.


தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ் இயங்கும், இணைப்பு தனியார் வேளாண் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, கல்வி கட்டணம் நிர்ணயம் செய்வதற்காக, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில், கல்வி கட்டண குழுவை அரசு நியமித்தது.இக்குழு நடப்பு கல்வி ஆண்டுக்கான, கல்வி கட்டணத்தை பரிந்துரை செய்துள்ளது.

அந்த அறிக்கையை, குழுவின் தலைவரான நீதிபதி சந்துரு, நேற்று வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணுவிடம் வழங்கினார்.


அப்போது, வேளாண் துறை செயலர் ககன்தீப்சிங்பேடி, வேளாண்மைத் துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, தோட்டக்கலை மற்றும் மலைப்பியர்கள் துறை இயக்குனர் சுப்பையன் ஆகியோர் உடனிருந்தனர்

No comments:

Post a Comment