ஐம்பெரும் ஆசிரியர் தினவிழாவில் ஆசிரியர்களுக்கு பாராட்டு - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, September 16, 2020

ஐம்பெரும் ஆசிரியர் தினவிழாவில் ஆசிரியர்களுக்கு பாராட்டு

ஐம்பெரும் ஆசிரியர் தினவிழாவில் ஆசிரியர்களுக்கு பாராட்டு

பன்னாட்டு ஆளுமை ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், சமூக நல கூட்டமைப்பு, மலேசியா தெங்கு அம்புவான் அப்சான் ஆசிரியர் கல்வியியல் கழகம், பேச்சு மன்ற புலன குழு, நாமக்கல் தமிழ் சங்கம் இணைந்து இணையவழியில் ஐம்பெரும் ஆசிரியர் தினவிழா நடந்தது.


 ஆசிரியர்களின் கல்வி மற்றும் பள்ளி வளர்ச்சி சார்ந்த நற்செயல்பாடுகளை பாராட்டி, காஞ்சிபுரம் ஒன்றியம் அங்கம்பாக்கம் தலைமை ஆசிரியர் தணிகைஅரசு, அங்கம்பாக்கம் பள்ளி அறிவியல் ஆசிரியர் தி.சேகர், காவாந்தண்டலம் பள்ளி ஆசிரியர் சரவணன் ஆகியோருக்கு ஆளுமை ஆசிரியர் செம்மல் விருது வழங்கப்பட்டது. விருதுபெற்ற ஆசிரியர்களை  காஞ்சிபுரம் வட்டார கல்வி அலுவலர்கள் சிவசங்கரன், நந்தாபாய் பள்ளி தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் உள்பட பலர் வாழ்த்தி பாராட்டினர்.

No comments:

Post a Comment