அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிகிறது: சட்ட மசோதா தாக்கல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, September 16, 2020

அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிகிறது: சட்ட மசோதா தாக்கல்

அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிகிறது: சட்ட மசோதா தாக்கல்

அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாக பிரிப்தற்கான சட்ட மசோதா நேற்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.


சட்டபேரவையில் சட்ட மசோதாவை உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் நேற்று தாக்கல் செய்தார். அந்த சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:


 பொறியியல்,ெதாழில் நுட்பம் அவை தொடர்பான அறிவியல் ஆகியவற்றின் மேம்பாட்டுக்காகவும், கற்பிப்பதிலும், ஆராய்ச்சிகளை தொடர்வதிலும் முன்னேற்ற வழிகளை காண நிறுவப்பட்ட அண்ணா பல்கலைக் கழகத்தில் 13 அரசுப்ெபாறியியல் கல்லூரிகள், கிண்டி பொறியியல் கல்லூரி, சென்னை அழகப்ப செட்டியார் தொழில் நுட்பக் கல்லூரியில் உள்ள அனைத்து துறைகள், எம்ஐடி  மற்றும் அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைவு பெற்றுள்ள கல்லூரிகள் மற்றும்  கல்வி நிறுவனங்களை உள்ளடக்கி  அண்ணா பல்கலைக் கழகம் இயங்கி வருகிறது.

இந்நிலையில், அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைவு பெற்ற மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளை சென்னையில் இருந்து நிர்வாகம் செய்து வருவது  அண்ணா பல்கலைக் கழகத்துக்கு சிரமமாக உள்ளது. அதனால், தற்போதுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


இதன்படி, இணைப்பு பெற்றுள்ள கல்லூரிகளை சிறந்த முறையில் கண்காணிக்கவும்,பொறியியல் மற்றும் தொழில் நுட்பத்தில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் அதிக கவனம் செலுத்தும் வகையில்,  இணைப்பு கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை கொண்ட ‘‘ அண்ணா பல்கலைக் கழகம்’’ என்ற பெயரில் ஒரு பல்கலைக் கழகம் தோற்றுவிக்கப்பட உள்ளது.

மேலும், தற்போதுள்ள அண்ணா பல்கலைக் கழகத்தை ‘‘அண்ணா தொழில் நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக் கழகம்’’ என்ற பெயரில் ஒருமை வகை பல்கலைக் கழகமாக மாற்றி அமைக்கவும் அரசு தீர்மானித்துள்ளது.  இந்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது

No comments:

Post a Comment