விடுபட்ட பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்க கோரிக்கை
தமிழக அரசு 2017-- - 18ம் கல்வி ஆண்டில் பிளஸ் - 2 பயின்ற மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாநில அரசு 2010- - 11 ஆம் கல்வியாண்டு தொடங்கி தமிழ் வழியில் பயிலும் பிளஸ்- 2 மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக லேப்டாப்களை வழங்கி வருகிறது. 2017 -- 18ம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களின் ஒட்டுமொத்த லேப்-டாப்கள் தேவை குறித்த கணக்கீடு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கணக்கீட்டின்படி லேப்-டாப்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன. பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வந்ததால் லேப்-டாப்கள் கொடுக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில் நீட் தேர்வை கருத்தில் கொண்டு 2019 -- 20 ஆம் ஆண்டில் பயிலும், பிளஸ் 1 மாணவர்களுக்கு லேப்-டாப்கள் வழங்க உத்தரவிடப்பட்டது.இதனையடுத்து 2018ல் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் தொடர்ந்து லேப்-டாப் வழங்க கோரி பள்ளியை முற்றுகையிட்டு வந்தனர்.
தற்போது கொரோனா தாக்கத்தால் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் மாணவர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய லேப்-டாப்களை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

I am same badge student I have not been offered a laptop yet
ReplyDelete