இன்ஜினியரிங் துணை கவுன்சிலிங்கில் 'அட்மிஷன்' அதிகரிக்க திட்டம் - Minnal Kalvi Seithi

Breaking

Friday, October 30, 2020

இன்ஜினியரிங் துணை கவுன்சிலிங்கில் 'அட்மிஷன்' அதிகரிக்க திட்டம்

 இன்ஜினியரிங் துணை கவுன்சிலிங்கில் 'அட்மிஷன்' அதிகரிக்க திட்டம்


இன்ஜினியரிங் கல்லூரிகளில், காலியிடங்கள் அதிகரித்ததால், துணை கவுன்சிலிங்கில், அனைத்து மாணவர்களுக்கும், மீண்டும் வாய்ப்பு அளிக்க உயர் கல்வித்துறை திட்டமிட்டுஉள்ளது.


தமிழக இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு, சிறப்பு பிரிவு, தொழிற்கல்வி மற்றும் பொதுப் பிரிவு கவுன்சிலிங் முடிந்து விட்டது. முடிவில், 91 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன.


 இன்னும் துணை கவுன்சிலிங் மட்டுமே நடத்த வேண்டியுள்ளது. இதில், வழக்கமாக, பிளஸ் 2 துணை தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மட்டும், வாய்ப்பு வழங்கப்படும். இந்தாண்டு, நவம்பர் இறுதி வரை மாணவர்களை சேர்க்க, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அனுமதி அளித்துஉள்ளது


.எனவே, இன்ஜினியரிங் கல்லூரிகளில், காலியிடங்களை நிரப்பும் வகையில், துணை கவுன்சிலிங்கில், பிளஸ் 2 துணை தேர்வு மாணவர்கள் மட்டுமின்றி, தகுதியான மற்ற மாணவர்களும் பங்கேற்று, இடங்களை தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என, தெரிகிறது.

No comments:

Post a Comment