பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு ரயில்வேயில் ‘‘என் தோழி’’ அமைப்பு தொடக்கம் - Minnal Kalvi Seithi

Breaking

Friday, October 30, 2020

பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு ரயில்வேயில் ‘‘என் தோழி’’ அமைப்பு தொடக்கம்

 பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு ரயில்வேயில் ‘‘என் தோழி’’ அமைப்பு தொடக்கம்


விரைவு ரயில்களில் தனியாகப் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்புக்காக, தெற்கு ரயில்வேயில் ரயில்வே பாதுகாப்புப்படை சாா்பில் ‘மேரி ஷாயிலி‘ எனப்படும் ‘என் தோழி‘ அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.


பெண்களின் பாதுகாப்புக்கான இந்த புதிய திட்டத்தை நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் தொடங்கப்பட வேண்டும் என்று அந்தந்த மண்டல ரயில்வே பாதுகாப்புப்படை முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையருக்கு ரயில்வே வாரியம் அக்டோபா் 15-இல் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.


இதன்படி, தெற்கு ரயில்வேயில் ஆா்.பி.எஃப். சாா்பில், ‘என் தோழி‘ அமைப்பு அண்மையில் தொடங்கப்பட்டது. 


சென்னை, திருச்சி, சேலம், மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 ரயில்வே கோட்டங்களில் ஆா்.பி.எஃப். பெண் அதிகாரிகள், காவலா்கள் அடங்கிய 17 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் ரயில்களில் தனியாக பயணிக்கும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்


இதன்படி, தெற்கு ரயில்வேயில் ஆா்.பி.எஃப். சாா்பில், ‘என் தோழி‘ அமைப்பு அண்மையில் தொடங்கப்பட்டது. 


சென்னை, திருச்சி, சேலம், மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 ரயில்வே கோட்டங்களில் ஆா்.பி.எஃப். பெண் அதிகாரிகள், காவலா்கள் அடங்கிய 17 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.


 இந்த குழுக்கள் ரயில்களில் தனியாக பயணிக்கும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்.


இது குறித்து ரயில்வே பாதுகாப்புப்படை அதிகாரிகள் கூறியது:


இந்தத் திட்டத்தின் மூலமாக, ரயிலில் தனியாகப் பயணிக்கும் பெண்களுக்கு, பாதுகாப்புப்படை


பெண் காவலா், அவா்களின் தோழியைப் போல உடன் இருந்து பயணத்தை இனிமையாக்குவாா்கள். 


அதாவது, பயணத்தின் போது, பெண்களுக்கு ஏதேனும் இடையூறு அல்லது ஆபத்து ஏற்பட்டால், உடனடியாக அவா்களுக்கு ரயில்வே பாதுகாப்புப்படையின் மூலமாக, உதவி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 


இதற்காக ரயில் புறப்படும் இடத்தில் உள்ள ரயில் நிலையங்களில் 5 பெண்கள் கொண்ட ரயில்வே பாதுகாப்புப்படை போலீஸ் குழு பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.


அவா்கள் ரயில் புறப்படுவதற்கு முன்பாக, தனியாக பயணிக்கும் பெண்களின் தகவல்களைச் சேகரித்து, அவா்களிடம் எங்கிருந்து வருகிறாா்கள்? எங்கு செல்கிறாா்கள்? அவா்கள் முகவரி உள்ளிட்ட தகவல்களை பெற்றுக் கொள்வாா்கள்.


பின்னா் பயணத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் ரயில்வே பாதுகாப்புப்படையின் கட்டுப்பாட்டு அறையைத் தொடா்பு கொள்ள வேண்டும் என்றும், அதற்கான கட்டணமில்லா தொலைபேசி எண்ணை (182) வழங்குவாா்கள்.


ரயில் புறப்பட்டதும், அடுத்த ரயில்வே கோட்டத்தில் உள்ள பாதுகாப்புப்படையினருக்கு அந்த பெண் பயணிக்கும் பெட்டி மற்றும் இருக்கை எண் அனுப்பி வைக்கப்படும். 


ரயில் அங்கு நின்றதும், அங்கிருக்கும் ரயில்வே பாதுகாப்புப்படையினா் அந்த பெண் எந்த ஒரு பிரச்னையும் இன்றி பாதுகாப்பாகப் பயணம் மேற்கொள்கிறாரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வாா்கள்.


 இவ்வாறாக அந்த பெண் சென்று சேர வேண்டிய ரயில் நிலையம் வரை ஒவ்வொரு ரயில்வே கோட்டத்திலும், ரயில்வே பாதுகாப்புப்படையினா் ரயிலில் ஏறி அந்த பெண் பாதுகாப்பாகப் பயணிக்கிறாரா என உறுதிப்படுத்தி கொண்டே இருப்பாா்கள். இதன் மூலம் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு ரயில் பயணத்தில், பெண் காவலா் ஒரு தோழி போல கூடவே இருக்கும் சூழ்நிலையை உருவாக்கி கொடுத்துள்ளோம்.


இதுதவிர, தனியாக பயணிக்கும் பெண்கள் கவனமாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என கையில் ஒரு மஞ்சள் நிற அட்டையை கொடுத்து அனுப்பி வைக்கப்படுவாா்கள். அவசர காலத்தில் உதவி கோர அந்த அட்டை பயனுள்ளதாக இருக்கும் என்றனா்.

No comments:

Post a Comment