ஆலோசகர் தேர்வுக்கு கால அவகாசம் நீட்டிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, October 15, 2020

ஆலோசகர் தேர்வுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

 ஆலோசகர் தேர்வுக்கு கால அவகாசம் நீட்டிப்பு


போக்குவரத்து சேவைகள் ஒருங்கிணைப்பு திட்டத்துக்கான கலந்தாலோசகர் தேர்வுக்கு, கால அவகாசம் அக்., 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் பொது போக்குவரத்து சேவைகளை ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இப்பணிகளை, ஒருங்கிணைந்த சென்னை பெருநகர போக்குவரத்து குழுமமான, 'கும்டா' மேற்கொள்கிறது. 


போக்குவரத்து ஒருங்கிணைப்பு திட்டம் தொடர்பான, மக்கள் கருத்து பெறுதல் உள்ளிட்ட பணிகளுக்காக, கலந்தாலோசகர்களை நியமிக்க, கும்டா முடிவு செய்தது.


இதற்கான அறிவிப்பு, செப்., முதல் வாரத்தில் வெளியிடப்பட்டது.


இதில், நிறுவனங்கள் பங்கேற்பதற்கான கால அவகாசம், முதலில், செப்., 28 என நிர்ணயிக்கப்பட்டது. இது, பின்னர், அக்., 9 வரை நீட்டிக்கப்பட்டது.தற்போது, இந்த கால அவகாசம், அக்., 23 வரை நீட்டிக்கபட்டுள்ளதாக, கும்டா அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment