வாகன ஆவணம் புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, October 15, 2020

வாகன ஆவணம் புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

 வாகன ஆவணம் புதுப்பிக்க  கால அவகாசம் நீட்டிப்பு


வாகனம் தொடர்பான ஆவணங்களை புதுப்பிக்க, டிசம்பர் வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.ஊரடங்கு காரணமாக, வாகன ஓட்டிகள், தங்களின் வாகனம் மற்றும் ஓட்டுனர் தொடர்பான ஆவணங்களை, புதுப்பிக்க முடியாமல் சிரமப்பட்டனர்.


பிப்., முதல், காலாவதியாகும் ஆவணங்களை, ஜூன் வரை புதுப்பிக்கலாம் என, மத்திய அரசு அனுமதித்தது. தொடர்ந்து ஊரடங்கு நடைமுறையில் இருந்ததால், புதுப்பிக்கும் காலத்தை, செப்டம்பர் வரை நீட்டித்தது. 


வட்டார போக்குவரத்து அலுவலகமான, ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், முழு அளவில் அதிகாரிகள் பணிபுரியாததால், ஆவணங்களை புதுப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, வரும் டிசம்பர் வரை, ஆவணங்களை புதுப்பிக்கலாம் என, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தது. அதை உறுதி செய்யும் வகையில், தமிழக அரசும் அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, வாகனங்களுக்கான தேசிய உரிமை, தேசிய வரி, வாகன உரிமம், தகுதிச் சான்று உள்ளிட்ட காலாவதியான ஆவணங்களை, டிச., 31ம் தேதி வரை புதுப்பிக்கலாம். 


அதேபோல், ஓட்டுனர் தொடர்பான எல்.எல்.ஆர்., உரிமம் உள்ளிட்ட காலாவதியான ஆவணங்களையும், டிச., வரை புதுப்பிக்கலாம். 


அதனால், போலீசார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், காலாவதியான ஆவணங்களுக்காக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment