பி.எஸ்சி., நர்சிங் படிப்புகள் ஆன்லைனில் விண்ணப்பம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, October 1, 2020

பி.எஸ்சி., நர்சிங் படிப்புகள் ஆன்லைனில் விண்ணப்பம்

 பி.எஸ்சி., நர்சிங் படிப்புகள் ஆன்லைனில் விண்ணப்பம்


பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, துணை மருத்துவப் படிப்புகளில் சேர, 'ஆன்லைன்' வழியிலான விண்ணப்ப வினியோகம் துவங்கியுள்ளது.



அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட, 17 துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு, 2020 - 21ம் கல்வி ஆண்டுக்கான, மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.


தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட மாணவர்கள், அரசு மருத்துவக் கல்லுாரி இடங்கள், தனியார் கல்லுாரிகளில் உள்ள, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பங்களை,


https://tnhealth.tn.gov.in, http://tnmedicalselection.netஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய, வரும், 15ம் தேதி கடைசி நாள்.

No comments:

Post a Comment