494 புதிய தமிழ் சொற்கள் கண்டுபிடிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, November 21, 2020

494 புதிய தமிழ் சொற்கள் கண்டுபிடிப்பு

 494 புதிய தமிழ் சொற்கள் கண்டுபிடிப்பு


494 புதிய தமிழ் சொற்கள் கண்டுபிடிப்பு

அகரமுதலி இயக்கம் சார்பில், தமிழில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட, 494 கலைச்சொற்கள் ஏற்கப்பட்டுள்ளன.


அகர முதலி இயக்ககத்தின், 72வது கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. அதில், 'கவிதை உறவு' இதழின் ஆசிரியர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தின் இயக்குனர் தமிழ் இயலன், புலவர் மதியழகன், கவிஞர்கள் சீனி, பழனி, ஞால ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


இதில், வங்கியில் பயன்படுத்தப்படும் பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ் கலைச் சொற்களை உருவாக்குவது குறித்து ஆராயப்பட்டது.


பிறமொழி கலப்பில்லாமல் பேசுவது, எழுதுவதன் அவசியம் குறித்து பேசிய ஏர்வாடி ராதாகிருஷ்ணன், வங்கியியல் சார்ந்த, 15 ஆயிரம் கலைச்சொற்களை உருவாக்கி, கலைச்சொல் அகராதி தயாரித்ததாக கூறினார்.


இக்கூட்டத்தில், அகரமுதலி திட்ட இயக்ககத்தின் சார்பில் உருவாக்கப்பட்ட, 500 புதிய தமிழ் கலைச் சொற்களில், 494 சொற்களுக்கு, அறிஞர்கள் ஒப்புதல் வழங்கினர். ஏற்கனவே, 19 ஆயிரம் புதிய கலைச்சொற்கள் ஏற்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 3,700 சொற்கள் அரசாணையாகும் தருவாயில் உள்ளன

No comments:

Post a Comment