லோகோ பெயர் கூறுவதில் மாணவர் உலக சாதனை - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, November 21, 2020

லோகோ பெயர் கூறுவதில் மாணவர் உலக சாதனை

 லோகோ பெயர் கூறுவதில் மாணவர் உலக சாதனை


மதுரை யு.கே.ஜி., மாணவர் பிரஜன் லோகோக்கள் கண்டறிந்து பெயர்கள் கூறி உலக சாதனை படைத்தார். 


மதுரை கூடல்நகர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பிரவீன் ~ ஜனனி மகன் பிரஜன். இகாமர்ஸ், ஆட்டோமொபைல், வங்கிகள், தொலைதொடர்பு, எம்.என்.சி., உட்பட பல்வேறு துறைகளின் 208 லோகோக்களை 2.14 நிமிடங்களில் கண்டறிந்து பெயர்களை கூறி சாதனை படைத்தார்.


பெற்றோர் கூறியதாவது: யூடியூப்பில் வித்தியாச சாதனை வீடியோக்களை பார்த்தபோது இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் ஐந்து வயது மாணவர் 3.49 நிமிடங்களில் லோகோக்கள் பெயர் கூறியது சாதனையாக இருந்தது. அதை முறியடிக்க பயிற்சி கொடுத்தோம். 


அவரது சாதனை வீடியோவை ஹரியானாவில் உள்ள ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸூக்கு அனுப்பி வைத்தோம். 20 நாட்களில் அதை உறுதி செய்து 'கிராண்ட் மாஸ்டர்' டைட்டில் வழங்கியது மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.

No comments:

Post a Comment