விரைவாக ஊதிய உயர்வு வழங்க சங்கங்கள் வலியுறுத்தல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, November 9, 2020

விரைவாக ஊதிய உயர்வு வழங்க சங்கங்கள் வலியுறுத்தல்

 விரைவாக ஊதிய உயர்வு வழங்க சங்கங்கள் வலியுறுத்தல்


ரேஷன் ஊழியர்களுக்கு, விரைவாக ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக அரசு அமைத்துள்ள குழுவிடம், அனைத்து தொழிற்சங்கங்களும் ஒட்டுமொத்தமாக வலியுறுத்தியுள்ளன.


கூட்டுறவு துறை சார்பில் நடத்தப்படும், ரேஷன் கடை ஊழியர்களுக்கு, புதிய ஊதியம் நிர்ணயம் செய்வது தொடர்பாக பரிசீலித்து, அறிக்கை அளிக்க, தமிழக அரசு, கூட்டுறவு கூடுதல் பதிவாளர் தலைமையில், எட்டு பேர் அடங்கிய குழுவை அமைத்துள்ளது.அந்த குழுவின் கூட்டம், சென்னையில் உள்ள, மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது.


 அதில், 12 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். அவர்களுடன், குழுவில் உள்ள அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.


அப்போது, அனைத்து சங்க நிர்வாகிகளும், ஊதிய உயர்வு அறிவிப்பை விரைவாக வெளியிடும்படி, ஒட்டுமொத்தமாக வலியுறுத்தினர். அனைத்து தொழிற்சங்கத்தினர் கூறியதாவது:



ரேஷன் கடை விற்பனையாளர் பெயரை, கடை எழுத்தர் என்று மாற்ற வேண்டும். 500 கார்டுதாரருக்கு ஒரு கடை என்று பிரித்து, ஊழியரை நியமிக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள், பெண்கள் பணிபுரியும் கடைகளுக்கு, கட்டாயம் எடையாளரை நியமிக்க வேண்டும்.


 ஊழியருக்கு தற்போது, 12 ஆயிரம் ரூபாய் தான் சம்பளம். விற்பனையாளருக்கு, 21 ஆயிரம் ரூபாய்; எடையாளருக்கு, 19 ஆயிரம் ரூபாய் என, குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்து, அதற்கான அறிவிப்பை, விரைவாக வெளியிட வேண்டும்.


ஆண்டுக்கு, 3 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.


 ஊழியர், அவரது மகள் திருமணத்திற்கு, 2 லட்சம் ரூபாய்; மகனாக இருந்தால், 1 லட்சம் ரூபாய் முன்பணம் வழங்க வேண்டும்; ஓய்வூதியமும் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவும், அதிகாரிகள் குழுவிடம் வழங்கப்பட்டது.


 அப்போது, 'டிசம்பருக்குள் அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்து, விரைவாக ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் உறுதி அளித்தனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

1 comment:

  1. ஐயா,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பருவகால காவலர் ஊதியம் மாதம் 5000(ஐயாயிரம்) வருடத்தி்ல் ஆறு மாதம் மட்டுமே வேலை (ஈரோடு) இங்கு பணுபுரிபவர்கள் வயது40-50. பல ஆண்டுகளாக பணியில் இருக்கிரோம் இன்னும் பணி நிரந்திரம் செய்யவில்லை.இவர்கள் இந்த 5000 ம் ஊதியத்தை வைத்து குடும்பத்தில் உள்ளவர்களை எப்படி காப்பாற்றுவது.ஆகவே இவர்களுக்கும. ஊதியம் உயந்தால் மகிழ்ச்சி.இவர்களின் ஊதியத்தைப்பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை தயவு செய்து இவர்களுக்கும் ஏதாவது வழி பிறந்தால் நன்றியுடன் இருப்போம்

    ReplyDelete