போலி கல்வி சான்றிதழ் கொடுத்து பணி : பள்ளிகளில் விசாரணை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, November 28, 2020

போலி கல்வி சான்றிதழ் கொடுத்து பணி : பள்ளிகளில் விசாரணை

 போலி கல்வி சான்றிதழ் கொடுத்து பணி : பள்ளிகளில் விசாரணை


மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஊழியர்கள் பலர் பணியில் சேர்ந்தபோது கொடுத்த கல்வி சான்றிதழ் உண்மைதானா என சம்பந்தப்பட்ட பள்ளிகளில் கோயில் நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.


இக்கோயிலில் சில ஆண்டுகளுக்கு முன் சேவுகர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டனர். பள்ளிகள் வழங்கிய கல்விச்சான்றிதழ் அடிப்படையில் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். 


இதில் சேவுகர் காமாட்சி என்பவர் கொடுத்த 10ம் வகுப்பு சான்றிதழ் போலியானது என கோயில் நிர்வாக அதிகாரி செல்லத்துரைக்கு கடிதம் வந்தது.


விசாரணையில் உண்மை எனத் தெரியவந்ததை தொடர்ந்து அவர் 'சஸ்பெண்ட்' செய்ய பட்டார். இதேபோல் சிலரும் பணியில் சேர்ந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 


இதையடுத்து காமாட்சியுடன் பணியில் சேர்ந்தவர்களின் கல்விச்சான்றிதழ்களை ஆய்வு செய்ய உத்தரவிடப் பட்டது. முதற்கட்டமாக பள்ளி சான்றிதழ் உண்மைதானா என சம்பந்தப்பட்ட பள்ளிகளிடம் கேட்டு கோயில் நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது.


இணைகமிஷனர் செல்லத்துரை கூறுகையில், ''பள்ளி நிர்வாகங்கள் அளிக்கும் பதிலை பொறுத்து நடவடிக்கை இருக்கும்'' என்றார்

1 comment:

  1. கோவிலில் வேலை செய்பவர்களே போலி சான்றிதழ் மூலம் பணி செய்கிறார்கள் என்றால் பொறுத்துக் கொள்ள முடியாதா....பள்ளிகளில் வேலை செய்யக்கூடிய ஆசிரியர்களே பல போலியான ஆசிரியர்கள் இருக்கிறார்கள் அதை சகித்துக் கொண்டு அரசாங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது...

    ReplyDelete