தனியார் பள்ளிகள் அங்கீகாரத்தை 5 ஆண்டுக்கு நீட்டிக்க பரிசீலனை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல் - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, December 22, 2020

தனியார் பள்ளிகள் அங்கீகாரத்தை 5 ஆண்டுக்கு நீட்டிக்க பரிசீலனை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

 தனியார் பள்ளிகள் அங்கீகாரத்தை 5 ஆண்டுக்கு நீட்டிக்க பரிசீலனை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, நாமக்கல் ஆகிய  மாவட்டங்களில் செயல்பட்டு வரும் தனியார் நர்சரி மற்றும் பிரைமரி  பள்ளிகளுக்கான தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா நேற்று ஈரோட்டில்  நடந்தது.


 இதற்கான ஆணைகளை வழங்கி அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: தனியார் பள்ளிகளுக்கு தற்போது 3 ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது.


இதை 5 ஆண்டுகளாக நீட்டிக்க தனியார் பள்ளி  நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். இது அரசின் பரிசீலனையில் உள்ளது. நிரந்தர அங்கீகாரம்  வழங்க வேண்டும் என்பதுதான் அரசின் விருப்பம். ஆனால் நீதிமன்ற தடை உள்ளது. 


ஜனவரி 15க்குள் 7200 ஸ்மார்ட் வகுப்புகள்  அமைக்கப்பட்டுவிடும். 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இவ்வாறு அவர் பேசினார்

No comments:

Post a Comment