தேசிய விடுமுறை நாட்களில் ரிசர்வேஷன் நேரம் குறைப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, December 22, 2020

தேசிய விடுமுறை நாட்களில் ரிசர்வேஷன் நேரம் குறைப்பு

 தேசிய விடுமுறை நாட்களில் ரிசர்வேஷன் நேரம் குறைப்பு


தேசிய விடுமுறை நாட்களில் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்திற்குட்பட்ட  முன் பதிவு நிலையங்கள் காலை 8 மணி முதல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை


: இனிவரும் காலங்களில் ஓணம், பொங்கல், கிறிஸ்துமஸ், தீபாவளி, ரம்ஜான் போன்ற தேசிய விடுமுறை தினங்களில் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்திற்குட்பட்ட அனைத்து முன்பதிவு நிலையங்களும் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும்.


 அதன்படி வரும் வெள்ளிக்கிழமை (25ம் தேதி) கிறிஸ்துமஸ் என்பதால் மதியம் 2 மணி வரை மட்டுமே முன்பதிவு நிலையங்கள் இயங்கும். மற்ற பணிகள் ஞாயிற்றுகிழமை கால அட்டவணைப்படி நடைபெறும்.

No comments:

Post a Comment