63 நர்சரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம்  - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, December 22, 2020

63 நர்சரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் 

 63 நர்சரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் 


கோவை மாவட்டத்தில் செயல்படும், 63 நர்சரி பள்ளிகளுக்கு, தொடர் அங்கீகார ஆணை வழங்கப்பட்டுள்ளது.


கொரோனா தொற்று காரணமாக, பள்ளிகள் அங்கீகாரம் பெறும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும், தொடர் அங்கீகார ஆணை, தற்போது பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.


கோவை மாவட்டத்தில், 63 நர்சரி பள்ளிகள், தற்போது தொடர் அங்கீகாரம் பெறும் நிலையில் இருப்பதால், அப்பள்ளிகளுக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. இது முதன்மை கல்வி அலுவலர் மூலம், உரிய பள்ளிகளுக்கு விரைவில் வழங்கப்படும்.உரிமமின்றி செயல்படும் பள்ளிகளின் பட்டியல், மாவட்ட வாரியாக திரட்டப்படுகிறது. 


கொரோனா தொற்றுக்கு பின் பள்ளிகள் திறக்கப்படும் பட்சத்தில், அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படாத பள்ளிகளில், சேர்க்கைக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment