விமான நிறுவனத்தில் வேலை வாய்ப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, December 22, 2020

விமான நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

 விமான நிறுவனத்தில் வேலை வாய்ப்பு


இந்திய விமான நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


இதுதொடர்பாக இந்திய விமான ஆணையம் (ஏ.ஏ.ஐ.,), பல்வேறு பிரிவுகளில் காலியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பம் செய்யலாம்


.இதன்படி ஏ.ஏ.ஐ., நிறுவனத்தில் மருத்துவ ஆலோசகர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க, எம்.பி.பி.எஸ்., கல்வி தகுதியாகும்; பணியிடம் சென்னை என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வரும், 31ம் தேதி கடைசி நாள்.


ஆலோசகர் பணியிடத்துக்கு, ஓய்வு பெற்ற பணியாளராக இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க வரும், 28ம் தேதி கடைசி நாள். ஐ.டி.ஐ., ட்ரேட் அப்ரன்டிஸ் பணிக்கு நாடு முழுவதும் மொத்தம், 21 காலிபணியிடங்கள் உள்ளன.


 இந்த பணிக்கு விண்ணப்பிக்க வரும், 31ம் தேதி கடைசி தேதி.மேலும் விபரங்களை ஏ.ஏ.ஐ.,யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment