மாணவர்களுக்கு இயக்குநர் அறிவுரை - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, January 21, 2021

மாணவர்களுக்கு இயக்குநர் அறிவுரை

 மாணவர்களுக்கு இயக்குநர் அறிவுரை


ஐந்து முறை கை கழுவ வேண்டும் என கல்வி இயக்குனர் அறிவுறுத்தினார். 


பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து, பள்ளிகளில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிகை நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய சிறப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது.


திருப்பூர் மாவட்டத்திற்கு ஒருங்கிணைந்த பள்ளிகல்வி மாநில திட்ட இயக்குனர் லதா தலைமையிலான, ஐந்து பேர் திருப்பூர் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.


அவிநாசி பகுதியில் ஆய்வு செய்த இயக்குனர் லதா கூறுகையில், ''மாணவர்கள் முக கவசம் அணிந்திருப்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். இரு வேளை வகுப்பறை, கழிப்பிடம் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். தொற்று அறிகுறி இருந்தால், தனி அறையில் அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment