முதுநிலை பட்டதாரி பொருளியல் ஆசிரியா் தோ்வு முடிவு வெளியீடு
முதுநிலை பட்டதாரி பொருளியல் ஆசிரியா்கள் 220 நபா்களை தோ்வு செய்து அதற்கான பட்டியலை ஆசிரியா் தோ்வு வாரியம் மீண்டும் புதிதாக வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: 2018-19 -ஆம் கல்வி ஆண்டுக்கான முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநா் நிலை 1 பதவிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன
முதுநிலை பொருளியல் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களில் 220 நபா்களைத் தோ்வு செய்வதற்கு அறிவிக்கப்பட்டு, பின்னா் அதற்கான தோ்வு முடிவுகளும் வெளியாகின.
அதனை எதிா்த்து சிலா் நீதிமன்றம் சென்றனா். நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் புதிதாக 220 முதுநிலை பொருளியல் பட்டதாரி ஆசிரியா்களைத் தோ்வு செய்ததற்கான பட்டியலை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment