பள்ளிக்கு வந்த மாணவர்கள் விவரங்கள் சேகரிக்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு
திண்டுக்கல்லில் பள்ளிக்கு வந்த மாணவர்களின் விபரங்களை சேகரிக்கும் பணி நடக்கிறது.
கொரோனாவால் கடந்த மார்ச் முதல் பள்ளிகள் மூடியுள்ளன.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனுக்காக, சில நாட்களுக்கு முன்பு 10, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க அரசு அனுமதியளித்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் (ஜன.19) முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாளில் மாணவர்கள் பலரும் ஆர்வமுடன் வந்தனர்.
வருகைப்பதிவு கட்டாயமாக்கப்படாத நிலையில், உடல் நலக்குறைவு, பள்ளிக்கு வர விருப்பமின்மையால் வீட்டில் இருந்து பயில்வோருக்கு ஆன்லைன் வழி கல்வி மற்றும் தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளிக்கு வர தயாராக இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அறிய விவரங்களை சமர்ப்பிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிக்கு வருகை தரும் மாணவர்களின் விவரம் சேகரிக்கப்படுகிறது.
அதேசமயம் பள்ளிக்கு வரச் சொல்லி மாணவர்களை கட்டாயப்படுத்த கூடாது எனவும் தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment