ஆசிரியர்களின் ஆன்லைன் வகுப்புகள்; மாணவர்களிடம் இயக்குநர் கேள்வி - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, January 21, 2021

ஆசிரியர்களின் ஆன்லைன் வகுப்புகள்; மாணவர்களிடம் இயக்குநர் கேள்வி

 ஆசிரியர்களின் ஆன்லைன் வகுப்புகள்; மாணவர்களிடம் இயக்குநர் கேள்வி


மதுரையில் ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் நடத்திய பாடங்களில் இருந்து கல்வி இயக்குனர்ராமேஸ்வர முருகன் மாணவர்களிடம் கேள்வி எழுப்பினார்.


பத்து மாதங்களுக்கு பின் பத்தாவது மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் செயல்பாடுகளை நோடல் அதிகாரி பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வித் திட்ட இயக்குனர் ராமேஸ்வரமுருகன் 3வது நாளாக திருமங்கலம், டி.குன்னத்துார், டி.கல்லுப்பட்டி உள்ளிட்ட பகுதி பள்ளிகளில் ஆய்வு நடத்தினார்.


டி.குன்னத்துார் அரசு மற்றும் பேரையூர் பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் ஆசிரியர்கள் ஆன்லைனில் நடத்திய பாடங்களில் இருந்து கேள்விகள் எழுப்பினார். 


மாணவர்கள் சரியான பதில் அளித்தனர். மனப்பாடப் பகுதியையும் படித்து காட்டினர்.


 சின்னக்கட்டளை பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வித் திட்ட மையத்தில் முதியவர்களிடம் 'எதற்காக படிக்க வந்தீர்கள்' என்றார். அதற்கு, “குறைந்தபட்சம் எழுத படிக்க மற்றும் பஸ்களில் ஊர் பெயர்களை வாசிக்க கற்க வந்தோம்,” என்றனர்.


சி.இ.ஓ.,சுவாமிநாதன், டி.இ.ஓ., முத்தையா, உதவி திட்ட அலுவலர் திருஞானம், நேர்முக உதவியாளர் சின்னதுரை உள்ளிட்டோர் உடன்சென்றனர்.

No comments:

Post a Comment