அரசு பள்ளிகளில் ஹைடெக் ஆய்வகம்: தயார் நிலையில் வைத்திருக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, January 21, 2021

அரசு பள்ளிகளில் ஹைடெக் ஆய்வகம்: தயார் நிலையில் வைத்திருக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

 அரசு பள்ளிகளில் ஹைடெக் ஆய்வகம்: தயார் நிலையில் வைத்திருக்க  தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு


அரசு பள்ளிகளில் உள்ள ஹைடெக் ஆய்வகத்தை, தயார் நிலையில் வைத்திருக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


 தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், இணைய வசதியுடன் கூடிய, உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேல்நிலைப்பள்ளிக்கு, 20 கணினிகள் மற்றும் உபகரணங்களும், உயர்நிலைப்பள்ளிக்கு, 10 கணினி மற்றும் உபகரணங்களும் வழங்கப்பட்டன. 


இவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முன், கொரோனா சூழல் காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டன. கடந்த ஒன்பது மாதங்களாக, பள்ளிகள் திறக்கப்படாததால், ஆய்வகம் பயன்பாடின்றி இருந்தது.


 தற்போது பிளஸ் 2 வகுப்புகள் துவங்கியுள்ளதால், மாணவர்களின் பயன்பாட்டுக்கு, ஆய்வகத்தை தயார்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கணினிகள் செயல்படுவதில் சிக்கல் இருப்பின், மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டுள்ள எல்காட் பணியாளர்களை கொண்டு, சரி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment