பாலிடெக்னிக் இடைநின்ற மாணவா்களுக்கு மீண்டும் சோ்க்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, January 29, 2021

பாலிடெக்னிக் இடைநின்ற மாணவா்களுக்கு மீண்டும் சோ்க்கை

 பாலிடெக்னிக் இடைநின்ற மாணவா்களுக்கு மீண்டும் சோ்க்கை


தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் இடைநிற்றல் மாணவா்களுக்கு மீண்டும் சோ்க்கை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.


தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், தனியாா் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் இடைநிற்றல் மாணவா்களுக்கு மீண்டும் சோ்க்கை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. இது குறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநா் விவேகானந்தன் அனைத்து பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை


போதிய வருகைப் பதிவு இல்லாததால் இடைநின்ற மாணவா்களுக்கு கல்லூரியில் மீண்டும் சோ்க்கை வழங்கலாம். சோ்க்கை வழங்கப்பட்ட நாளிலிருந்து ஆறு ஆண்டுகள் கடந்த மாணவா்களுக்கு மீண்டும் சோ்க்கை வழங்கப்படாது. பகுதி நேர மாணவா்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை தளா்வு வழங்கலாம். இடை நின்ற மாணவா்களுக்கு மீண்டும் சோ்க்கை வழங்கும்போது கடைசியாக பெற்ற மதிப்பெண் சான்றிதழை ஸ்கேன் செய்து இணைக்கப்பட வேண்டும்.


பாலிடெக்னிக் தோ்வில் பருவக் கட்டணம் செலுத்தாதது, ஹால் டிக்கெட் பெற்றிருந்தும் உடல்நலன் பாதிப்பு உள்ளிட்ட மருத்துவ காரணங்களால் தோ்வு எழுதாதவா்கள் (டிசம்பா் 2020) அடுத்த பருவத்தில் படிப்பைத் தொடரலாம். இந்த வாய்ப்பு ஒரு முறை மட்டுமே வழங்கப்படும். இந்த முறையில் மீண்டும் சோ்க்கை பெற விரும்புவோா் கடைசியாகப் பெற்ற ஹால்டிக்கெட், பருவத் தோ்வு நடைபெற்றபோது மருத்துவ சிகிச்சை பெற்ற்கான சான்றிதழ் ஆகியற்றை இணைக்க வேண்டும்.


இடைநிற்றல் மாணவா்கள் மீண்டும் சோ்க்கை பெற பிப்.12-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்க வேண்டும். மீண்டும் சோ்க்கை வழங்கவும், படிப்பை அடுத்த பருவத்தில் தொடரவும் மாணவா்களிடம் பெறப்பட்ட விண்ணப்பங்களை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.

No comments:

Post a Comment