சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் பள்ளி மாணவிக்கு பல் புரஸ்கார் விருது - Minnal Kalvi Seithi

Breaking

Friday, January 29, 2021

சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் பள்ளி மாணவிக்கு பல் புரஸ்கார் விருது

 சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் பள்ளி மாணவிக்கு பல் புரஸ்கார் விருது


பதினெட்டு வயதுக்கு உட்பட்டோருக்கு வழங்கப்படும் மத்திய அரசின் பல் புரஸ்கார் விருதுக்கு, செங்கல்பட்டை சேர்ந்த 3ம் வகுப்பு மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திராசிட்டி தொழிற்பூங்காவில் உள்ள தனியார் குடியிருப்பில் வசிப்பவர் மத்திய பிரதேசத்தை சேர்ந்த பிரவீன் குமார் சிங். 


இவரது மனைவி ஸ்ருதி சிங். இவர்களது மகள் பிரீத்தி சிங் (7). மகேந்த்திரா சிட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கிறார். மரம் நடுவதை ஆர்வமாக கொண்டுள்ள இச்சிறுமி, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ஒரு லட்சம் மரகன்றுகளை நடுவதற்கு, திட்டமிட்டார்.


 இதைதொடர்ந்து, தனது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் இதுவரை, சுமார் 13,500 பழ வகை மரகன்றுகளை விதைத்துள்ளார். மேலும், தனக்கென பேஸ்புக், டிவிட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை உருவாக்கி, அதன் மூலம் மரம் நடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்


இந்நிலையில், குடியரசு தினத்தையொட்டி, மத்திய அரசின் பிரதம மந்திரி பல் புரஸ்கார் விருது, 18 வயதுக்கு உட்பட்ட சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு மாணவி பிரீத்தி சிங் தேர்வாகியுள்ளார். 


இதனை தொடர்ந்து, பிரதமர் மோடியுடன் காணொலி காட்சி மூலம் பங்கேற்ற இச்சிறுமிக்கு, விருதுடன் 1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது. பள்ளி சிறுமியின், சுற்றுச்சூழல் ஆர்வத்தை பாராட்டி, கடந்த 3 நாட்களுக்கு முன் நடந்த குடியரசு தினவிழாவில், செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ் சான்றிதழ் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment