CBSE 10 & 12 ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியிடப்படும் தேதி அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, January 28, 2021

CBSE 10 & 12 ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியிடப்படும் தேதி அறிவிப்பு

 CBSE 10 & 12 ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியிடப்படும் தேதி அறிவிப்பு


சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை வருகிற பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். 


கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் ஜனவரி முதல் திறக்கப்பட்டு வருகின்றன. இடைப்பட்ட காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாத காரணத்தால் சிபிஎஸ்இ பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டன


இந்நிலையில், நடப்பு கல்வியாண்டிற்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வருகிற பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியிடப்படும் என அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் வெளியிட்டுள்ளார். மேலும் 45 ஆண்டு கால சிபிஎஸ்இ மாணவர்களின் ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும் கூறினார். 


நாடு முழுவதுமுள்ள சிபிஎஸ்இ கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுடன் காணொலி கூட்டத்தில் அமைச்சர் கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது. 


 

No comments:

Post a Comment