TNPSC : தொழில் துறை தேர்வு: விதிமுறைகள் அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, January 2, 2021

TNPSC : தொழில் துறை தேர்வு: விதிமுறைகள் அறிவிப்பு

 TNPSC : தொழில் துறை தேர்வு: விதிமுறைகள் அறிவிப்பு


தொழில் துறை பதவிகளுக்கு வரும், 9ம் தேதி நடத்தப்படும் போட்டி தேர்வுக்கான விதிமுறைகளை, தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.


இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழில் மற்றும் வணிக துறையில் உதவி இயக்குனர்,உதவி கண்காணிப்பாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு, வரும், 9 மற்றும், 10ம் தேதிகளில் நடக்க உள்ளது.வரும், 9ம் தேதி காலை மற்றும் பிற்பகலில், ஐந்து மாவட்டங்களில், 13 தேர்வு அறைகளிலும்; 10ம் தேதி, ஐந்து மாவட்டங்களில், ஐந்து தேர்வறைகளிலும் தேர்வு நடத்தப்படுகிறது.


தேர்வுக்கு விண்ணப்பித்து தகுதி பெற்ற மாணவர்கள்,


 www.tnpsc.gov.in 


மற்றும் 


www.tnpscexams.in 


என்ற இணையதளங்களில், 'ஹால் டிக்கெட்' பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 


விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, பதிவிறக்கம் செய்ய வேண்டும். விடைகளை குறிக்க, கறுப்பு மை நிற பந்துமுனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


 தவறினால், அந்த விடைத்தாள்கள் செல்லாததாக அறிவிக்கப்படும். காலை தேர்வுக்கு, 9:15 மணி; பிற்பகல் தேர்வுக்கு, 1:45 மணிக்குள் தேர்வு அறைக்கு வந்து விட வேண்டும்; அதன்பின், அனுமதி கிடையாது.


அதேபோல, காலை தேர்வில், பகல், 1:15 மணிக்கு முன்னும், பிற்பகல் தேர்வில், மாலை, 4:45 மணிக்கு முன்னும், தேர்வறையில் இருந்து வெளியேற அனுமதி கிடையாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.மொத்தம், 11 காலியிடங்களை நிரப்பும் வகையில், இந்த தேர்வு நடத்தப்படுகிறது. 


இதற்கு, கடந்த ஆண்டு ஜனவரியில் விண்ணப்ப பதிவு நடந்து முடிந்தது. பி.இ., இன்ஜினியரிங் படிப்பை முடித்து, தொழிற்சாலைகளில் பணி அனுபவம் பெற்றவர்கள், இந்த தேர்வை எழுத தகுதி பெற்றவர்கள்.

No comments:

Post a Comment