நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ரூ. 30 கோடியில் ஆராய்ச்சி மையம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, February 20, 2021

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ரூ. 30 கோடியில் ஆராய்ச்சி மையம்

 நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ரூ. 30 கோடியில் ஆராய்ச்சி மையம்


திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், ரூ. 30 கோடியில் ஆராய்ச்சி மையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக செனட் கூட்டம் துணைவேந்தர் கா.பிச்சு மணி தலைமையில்  நடைபெற்றது. பதிவாளர் ஆர்.மருத குட்டி, சிண்டிகேட் உறுப்பினர்கள், செனட் உறுப்பினர்கள், கல்லூரி முதல்வர்கள் பங்கேற்றனர். துணைவேந்தர் பேசியதாவது:


பல்கலைக்கழகத்தில் ரூ.30 கோடியில் ஆராய்ச்சி மையம் அமைக்க, சாப்ட்வேர் டெக்னாலஜி பார்க் ஆப் இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.


இதற்கான அடிக்கல் நாட்டுவிழா விரைவில் நடைபெறவுள்ளது. பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி களுக்கான கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழக அரசு ரூ.20 கோடி ஒதுக்கியிருக்கிறது. பல்கலைக் கழகத்தில் தற்போது ரூ.1.47 கோடியில் 5 ஆராய்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இங்குள்ள 52 ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சிகளை மேற் கொள்ள ரூ.1.53 கோடி நிதியுதவி பெற்றுள்ளனர்.


பல்கலைக்கழகத்தில் ரூ.9.1 கோடி மதிப்பில் பாரதியார் மைய த்தை உருவாக்க, மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. பாரதியார் குறித்த முழு ஆய்வு மேற்கொள்ளும் வகையில் இம்மையத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். உணவு பதப்படுத்துதல் மற்றும் தர மேம்பாடு குறித்த இளங்கலை தொழில்நுட்ப பாடப்பிரிவுக்கும், வேளாண்மைத்துறை பட்டயப் படிப்புக்கும், யுஜிசி அனுமதி அளித்திருக்கிறது, என்று தெரிவித்தார்.


பல்கலைக்கழக சிண்டிகேட்டில் ஆசிரியர் தொகுதியில் காலியாக வுள்ள 2 இடங்களுக்கான தேர் தலை நடத்த வேண்டும்' என்று உறுப்பினர் நாகராஜன் பேசினார்.


தேர்தல் நடத்த திட்டமிடப் பட்டிருந்தது. ஆனால், மதுரை உயர் நீதிமன்ற கிளையில், இதுதொடர்பாக 4 வழக்குகள் நிலுவையில் இருப்பதால் நடத்த முடியாமல் போனது' என, துணை வேந்தர் விளக்கம் அளித்தார். இதை ஏற்காத சிலர், கூட்ட அரங்கில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வழக்கு வரும் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதால், அதுவரை பொறுத் திருக்குமாறு துணை வேந்தர் கேட்டுக்கொண்டார்.


ஆனால், தர்ணா நீடித்ததால், பல்கலைக்கழக வழக்கறிஞரின் கருத்தை கேட்டபின்னர், கூட்டத்தை நடத்தலாம் என்று தெரிவித்துவிட்டு, துணைவேந்தர் வெளியே சென்றார். மதிய உணவுக்குப்பின் மீண்டும் கூட்டம் தொடங்கியது. `தேர்தல் தொடர்பாக 4 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இதுதொடர்பாக, மேற் கொண்டு எந்த நடவடிக்கையில் இறங்கினாலும் அது, நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடும். வழக்கு விசாரணை முடியும்வரை பொறுத்திருக்க வேண்டும்' என்று துணைவேந்தர் தெரிவித்தார்.


ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உறுப்பினர்கள் கோஷமிட்டனர். கூட்டத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக துணைவேந்தர் தெரிவித்தார். இதைக்கண்டித்து பல்கலைக்கழக பிரதான வாயில் கதவை அடைத்து, தரையில் அமர்ந்து மூட்டா அமைப்பை சேர்ந்த பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment