அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களை உதவிப் பேராசிரியர்களாக நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு உயர் நீதிமன்றம் தடை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, February 20, 2021

அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களை உதவிப் பேராசிரியர்களாக நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

 அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களை உதவிப் பேராசிரியர்களாக நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு உயர் நீதிமன்றம் தடை


அரசுக் கல்லூரிகளில் கவுரவ உதவியாளர்களை உதவி பேராசிரியர்கள் நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தென்காசி வாசுதேவநல்லூரைச் சேர்ந்த பாண்டியம்மாள், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:


அரசு கலைக் கல்லூரிகளில் 2331 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக 4.10.2019-ல் அறிவிப்பு வெளியானது. தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வரும் நான் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தேன்.


இந்நிலையில் அரசுக் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக பணிபுரிபவர்களை உதவி போராசிரியர்களாக நியமிக்க முடிவு செய்துள்ளனர்.


உதவிப் பேராசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாகவே நிரப்ப வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு விதியில் கூறப்பட்டுள்ளது. இதனால் அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக நியமிக்க தடை கோரி உயர்


நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் என் கோரிக்கையை அரசு பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.


இந்நிலையில் அரசு கல்லூரிகளில் 5 ஆண்டுகளாக கவுரவ விரிவுரையாளர்காக பணிபுரிந்து வருவோர்களை உதவி பேராசிரியர்களாக நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும்.


இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.


இந்த மனுவை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார். பின்னர் கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்

No comments:

Post a Comment