ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு படிப்படியாகப் பணி: செங்கோட்டையன் - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, February 21, 2021

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு படிப்படியாகப் பணி: செங்கோட்டையன்

 ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு படிப்படியாகப் பணி: செங்கோட்டையன்


5 முதல் 8-ம் வகுப்பு வரை இந்தாண்டு தேர்வுகள் நடைபெறுவது குறித்து முதல்வர் அறிவிப்பார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.


ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் நல்வாழ்வுத்துறை ஆலோசனை கூறிய பிறகு தேர்வு குறித்து முதல்வர் அறிவிப்பார் எனக் கூறினார்.


முதல்வர் ஆட்சிக் காலம் பொற்காலம் என்றும், 5 முதல் 8-ம் வகுப்பு வரை இந்தாண்டு தேர்வுகள் நடைபெறுவது குறித்து முதல்வர் அறிவிப்பார் என்றும் குறிப்பிட்டார்.


மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு படிப்படியாக பணிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment