பள்ளி கட்டணம்; 'பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு சாதகமான வகையில் முடிவெடுப்பது அவசியம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, February 24, 2021

பள்ளி கட்டணம்; 'பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு சாதகமான வகையில் முடிவெடுப்பது அவசியம்

 பள்ளி கட்டணம்; 'பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு சாதகமான வகையில் முடிவெடுப்பது அவசியம்


பெங்களூரு ~ 'பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு சாதகமான வகையில் முடிவெடுப்பது அவசியம். பள்ளி கட்டணம் தொடர்பாக, ஆலோசிக்கப்படும்,' என, தொடக்க, உயர்நிலைப்பள்ளி கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்தார்


.வெவ்வேறு தனியார் பள்ளி சங்கங்களின் ஒருங்கிணைப்பில், பள்ளி கட்டணத்தை குறைப்பு உத்தரவை மறுபரிசீலனைக்கு வலியுறுத்தி, நேற்று போராட்டம் நடத்தினர். போராட்ட இடத்துக்கு சென்ற அமைச்சர் சுரேஷ்குமார், கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டார்


.பின் அவர் பேசியதாவது:தனியார் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோரின் நலனை மனதில் கொண்டு, நடப்பு கல்வியாண்டுக்கு மட்டும் பொருந்தும் வகையில், 30 சதவீதம் கல்வி கட்டணம் குறைக்கப்பட்டது. இது தனியார் பள்ளிகளின் நலனுக்கும், இது நல்ல முடிவு தான்.


ஒரு முடிவை எடுப்பதற்கு முன், பலமுறை பள்ளி சங்கத்தினர், பெற்றோர் சங்கங்களுடன், ஆலோசனை நடத்தப்பட்டது. இரு தரப்பினரின் கருத்துகளை கேட்டறிந்து, அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவுக்கு பிறகே, பெற்றோர் கட்டணம் செலுத்த துவங்கினர்


. இது தனியார் பள்ளிகளுக்கு, சாதகமாக இல்லையா?இந்த கட்டணம் ஆசிரியர்களுக்கு, ஊதியம் வழங்க உதவியாக இருந்தது. ஆசிரியர்களின் நலனை மனதில் கொண்டு, அரசு உத்தரவிட்டது. கொரோனா காலகட்டத்தில், பிரச்னை ஏற்பட்டது. ஆசிரியர்களின் கஷ்டத்தை, நான் நேரில் கண்டேன். அவர்கள் நரேகா திட்டத்தில் பணியாற்றினர்; சிலர் காய்கறி விற்கின்றனர்.


அதேபோல, மாணவர்களின் பெற்றோரும் கூட, வேலையை இழந்து அவதிப்பட்டனர். அனைவருக்கும் உதவியாக இருக்க வேண்டும் என்பதால், கல்வி கட்டணத்தில், 30 சதவீதம் குறைக்க, அரசு முன் வந்தது. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, எந்த வகையிலாவது உதவ வேண்டும் என, நாங்கள் அனைத்து முயற்சியும் செய்தோம்.


ஆசிரியர் ~~ பெற்றோர் இடையே முன்பிருந்த நம்பிக்கை தற்போது இல்லை. இதனால் ஒருமித்த முடிவுக்கு வர முடியாததால், அரசு தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.கும்பகோணத்தில் பள்ளியில் நடந்த, அசம்பாவிதத்தில், 92 பிள்ளைகள் இறந்தனர். இந்த சம்பவத்துக்கு பின், உச்சநீதிமன்ற உத்தரவின்படி, பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கும்படி, தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டது


.ஒன்றாம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை பள்ளிகளை துவக்க, அரசு முயற்சிக்கிறது. சுகாதாரத்துறையுடன், ஆலோசனை நடத்தப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment