கணினி பட்டதாரிகள் சங்கத்தின் புதிய கோரிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, February 24, 2021

கணினி பட்டதாரிகள் சங்கத்தின் புதிய கோரிக்கை

 கணினி பட்டதாரிகள் சங்கத்தின் புதிய கோரிக்கை


கணினி அறிவியல் பாடத்தை ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை கட்டாயமாக்க வேண்டும் என, கணினி பட்டதாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


தமிழக இடைக்கால பட்ஜெட்டில், 6 முதல், 10ம் வகுப்பு வரை, கணினி அறிவியல் பாடம் அறிமுகம் செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டது. 


இதற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தரப்பில் வரவேற்பு கிடைத்துள்ளது. அதேநேரம், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.


இதுகுறித்து, தமிழக பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்க பொதுச்செயலர் குமரேசன் விடுத்த அறிக்கை:


 தமிழகத்தில், சமச்சீர் கல்வி பாட திட்டத்தில், 2011ம் ஆண்டே, ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. தனியாக புத்தகமும் தயாரிக்கப்பட்டது. ஆனால், அதை பள்ளி கல்வித்துறை செயல்படுத்தவில்லை.


நம் பாட திட்டத்தை, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் பின்பற்றி, அங்கு ஒன்றாம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடத்தை அறிமுகம் செய்துள்ளன. எனவே, தமிழகத்திலும், ஒன்றாம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும். இதனால், ஆயிரக்கணக்கான கணினி அறிவியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment