ஆசிரியர்களின் உயர்கல்விக்கு அனுமதி: பள்ளி கல்வி அதிகாரிகள் நடவடிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, February 24, 2021

ஆசிரியர்களின் உயர்கல்விக்கு அனுமதி: பள்ளி கல்வி அதிகாரிகள் நடவடிக்கை

 ஆசிரியர்களின் உயர்கல்விக்கு அனுமதி: பள்ளி கல்வி அதிகாரிகள் நடவடிக்கை


பகுதி நேரமாக படித்த ஆசிரியர்களுக்கு, உயர்கல்விக்கான அனுமதியை வழங்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தாங்கள் பணியில் சேரும் போது பெற்ற கல்வி தகுதியை அதிகரிக்கும் வகையில், மேற்படிப்பு படிக்கலாம்


. இதற்கு தங்களின் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் கல்வி அலுவலர்களிடம் அனுமதி பெற வேண்டும்.அனுமதி பெறாமல் படித்த ஆசிரியர்களின் கல்வி தகுதியை, அவர்களின் பணி பதிவேட்டில் சேர்க்கவோ, பதவி உயர்வு மற்றும் உயர்கல்விக்கான சம்பள உயர்வுக்கு வழங்கவோ அனுமதி இல்லை.


இந்நிலையில், 2010 முதல் உயர்கல்வி படிப்புக்கான அனுமதி கேட்டு, நுாற்றுக்கணக்கான ஆசிரியர்கள் பள்ளி கல்வித்துறையில் விண்ணப்பித்தனர்


. இந்த விண்ணப்பங்கள், பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தன.இது குறித்து, நம் நாளிதழில் இரண்டு முறை செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, உயர்கல்விக்கான அனுமதிக்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, உரிய பதிலளிக்கப்பட்டு வருகிறது.


உயர்கல்விக்கான அனுமதி விண்ணப்பங்கள் மீது உரிய முடிவு எடுத்து, கோப்புகள் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இணை இயக்குனர் பொன்னையாக சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இதன்படி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள், 57 பேர், பகுதி நேர மற்றும் மாலை நேர உயர்கல்வி முடித்ததற்கு அனுமதி பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment