கரையான் அரித்த புத்தகங்கள்: பள்ளியில் அலட்சியம்: முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, February 16, 2021

கரையான் அரித்த புத்தகங்கள்: பள்ளியில் அலட்சியம்: முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு

 கரையான் அரித்த புத்தகங்கள்: பள்ளியில் அலட்சியம்: முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு


திருப்பூர், தேவாங்கபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்ட இலவச பாடப்புத்தகங்கள் கரையான் அரித்த நிலையிலும், காலணிகள் சிதறிய நிலையிலும் கிடந்ததாக புகார் எழுந்தது.அங்கு நேரில்  ஆய்வு நடத்திய, முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ், நிருபர்களிடம் கூறியதாவது:


கடந்த, 2017-18ம் கல்வியாண்டில், மீதமான புத்தகங்களே, சேமிப்புக்கிடங்கில் இருந்தன. புதிய பாடத்திட்டத்தில், அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்கள், மாணவர்களுக்கு வினியோகிக்கப்பட்டு விட்டன. கிடங்கில் இருந்தவை, பயன்பாடற்ற காலாவதி புத்தகங்கள்.


பழைய பாடப்புத்தகங்களாக இருந்தாலும், கரையான் அரிக்காதபடி, உரிய மருந்துகள் தெளித்து, புத்தகங்களை பராமரிப்பது அவசியம். மாணவர்களுக்கு வினியோகித்து, மீதமிருந்த, ஜோடி சேராத காலணிகள், 200க்கும் மேற்பட்டவை பள்ளியில் வைக்கப்பட்டிருந்தன. இவை, சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும்.பள்ளிகள் செயல்பாட்டுக்கு வராவிட்டாலும், தலைமை ஆசிரியர்கள் அடிக்கடி ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment