காவல்துறை சார்பு ஆய்வாளர் தேர்வுத் தேதி: சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, February 20, 2021

காவல்துறை சார்பு ஆய்வாளர் தேர்வுத் தேதி: சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

 காவல்துறை சார்பு ஆய்வாளர் தேர்வுத் தேதி: சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு


கடந்த ஆண்டு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த காவல்துறை சார்பு ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்துத் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையக் குழும கூடுதல் காவல்துறை இயக்குநர்/ உறுப்பினர் அளித்துள்ள செய்திக்குறிப்பு:


'2019-ம் ஆண்டுக்கான சார்பு ஆய்வாளர் தேர்வில் காவல்துறை விண்ணப்பதாரர்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது.


கரோனா தொற்று காரணமாக இந்தத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. பிறகு 2020-ம் ஆண்டு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில் நேர்முகத் தேர்வுக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது


அதன்படி, 24.12.2020 நடைபெறுவதாக இருந்த தேர்வு 23.02.2021 அன்று நடைபெற உள்ளது. 28.12.2020 நடைபெறுவதாக இருந்த தேர்வு 24.02.2021 அன்று நடைபெற உள்ளது. 29.12.2020 அன்று நடைபெறுவதாக இருந்த தேர்வு 25.02.2021 அன்று நடைபெற உள்ளது.


அதேபோல 30.12.2020 நடைபெறுவதாக இருந்த தேர்வு 26.02.2021 அன்று நடைபெற உள்ளது. 04.01.2021 அன்று நடைபெறுவதாக இருந்த தேர்வு 27.02.2021 அன்று நடைபெற உள்ளது. 05.01.2021 அன்று நடைபெறுவதாக இருந்த தேர்வு 01.03.2021 அன்று நடைபெற உள்ளது. 06.01.2021 அன்று நடைபெறுவதாக இருந்த தேர்வு 02.03.2021 அன்று நடைபெற உள்ளது.'.


இவ்வாறு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment