கரோனா ஊரடங்கு காலத்தில் இணையவழி கல்வி வழங்கிய அரசுப் பள்ளி ஆசிரியருக்கு விருது - Minnal Kalvi Seithi

Breaking

Monday, February 1, 2021

கரோனா ஊரடங்கு காலத்தில் இணையவழி கல்வி வழங்கிய அரசுப் பள்ளி ஆசிரியருக்கு விருது

 கரோனா ஊரடங்கு காலத்தில் இணையவழி கல்வி வழங்கிய அரசுப் பள்ளி ஆசிரியருக்கு விருது


கரோனா ஊரடங்கு காலத்தில் இணையவழி கல்வி வழங்கிய அரசுப் பள்ளி ஆசிரியருக்கு விருது வழங்கப்பட்டது. 

திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் செயல்படும் நிலாமுற்றம் என்ற இலக்கிய அமைப்பு ஆண்டு தோறும் பல்வேறு துறைகளில் சேவை புரிந்தவர்கள் பாராட்டி விருதுகள் வழங்கி வருகிறது. 

அந்த வகையில் இந்த ஆண்டு ஊரடங்கு காலத்தில் இணையவழியில் மாணவர்களுக்கு கல்வி வழங்கியமைக்காக தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் சூரியகுமாருக்கு விருது வழங்கி கௌரவித்து இருக்கிறது. 

வலங்கைமான் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலாமுற்றம் ஐந்தாம் ஆண்டு விழாவில் இவ்விருதினை திரைப்பட இயக்குநர் சிவா. வழங்கினார். 

மூத்த ஆசிரியர் சுப்ரமணியம், நிலாமுற்றம் நிறுவனர் தமிழ்ச்செம்மல் வேல்முருகன் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment